Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 3

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What is the divine secret behind Sri Periyava’s transformation from a young boy to a Jagadguru? Sri Periyava answers.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the series, translation and a beautiful drawing…Rama Rama

ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா

(அவர் எழுத்திலேயே)

மூன்றாம் படி

அதெப்படியாயினும், தீர்மானத்தை அன்றைய காமகோடி அதிபர் ஸ்வாமிநாதனிடம் அப்போது கூறவில்லை. சிறுவன் ஒருவனிடம் இத்தகைய ஒரு பெரிய விஷயத்தை உடனே எந்தப் பெரியவரும் வெளியிட்டிருக்க மாட்டார்தான். அதிலும், ஜகதாசார்ய பீடத்தில் ஆரோஹணிப்பதற்கான தகுதிகள் என்று நாம் எவற்றை எண்ணுகிறோமோ அவற்றைப் பெற்றிராத ஒரு கிறிஸ்துவ மிஷனரிப் பள்ளி மாணவனான சிறுவனுக்கு வெளியிட்டிருப்பதற்கில்லைதான். அதோடு, அவனது குடும்பம் பூர்விகர் காலத்திலிருந்து ஸ்ரீமடத்துடன் அத்யந்தத் தொடர்பு கொண்டதே எனினும் அவனைப் பொறுத்தமட்டில் அந்தப் பரிசயம் அவனுக்கு இல்லை. அப்படிப்பட்டவனிடம் அந்த மாபெரும் நிறுவனத்தின் நிர்வாகமே அவனுக்கு ஆக்கப்படவிருக்கிறது என்று சொல்லாததில் ஆச்சரியமில்லை. பிற்பாடும் பீடாதிபதிகள் இவ்விஷயங்கள் அவனிடம் சொல்வதற்கில்லாமல், அடுத்த ஏழாம் மாதமே அவர் தேஹவியோகமாகி விட்டார்.

இது பூர்வாசாரியார் தரப்பில், ஸ்வாமிநாதன் தரப்பில், முன்னமே சொன்னதுபோல, அவன் பெற்றிருக்கக்கூடிய அந்தரங்க உயரநுபவங்கள் எதனையும் அவன் அதன்பின் எண்பத்தெட்டாண்டு வாழ்ந்த போதிலும் எவரிடமும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. அப்படி எதுவும் தாம் பெறவில்லை என்றே இவ்வாசிரியரிடம் வலியுறுத்தியுமிருக்கிறார். ஆயினும் இவன் மிகவும் மன்றாடியதன் மீது, அவர் கருணைகூர்ந்து வெளி உணர்ச்சியை ஓரளவு விரிவாகவும், உள் உணர்ச்சியையுங்கூடக் கோடி காட்டியும் தெரிவித்தது இதோ, வாசகரனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது:

“அவரைப் பாத்தப்போ மத்த மநுஷாளைப் பாக்கறாப்பலே இல்லே. ரொம்பப் பெரிசா ஒத்தர்-ங்கற ஃபீலிங், அது மட்டும் (அதுவரையில்) யார் கிட்டயும் ஏற்படாத ஒரு மரியாதை உண்டாச்சு. மஹான்கள், ஞானிகள்னு ஸ்வாமியோடயே வெச்சு நெனக்கற மாதிரி அதுவரை கதை – புராணத்துலேதான் கேட்டிருந்தது; ட்ராமாவில பாத்திருந்தது. இப்பத்தான் அப்படி ஒத்தரை நேர்லயே பாக்கறோம்னு தோணித்து. கதை கேட்டப்பவும், ட்ராமா பாத்தப்பவும் உண்டாகாத ஒரு மரியாதையும் உண்டாச்சு.

“அந்த மரியாதை ஒரு பக்கம். அதோட, என்னமோ ஒரு ப்ரியம்! அவர் அவ்வளோ பெரியவர், நான் எவ்வளோ சின்னவன்-னாலுங்கூட, ‘இந்த மஹான் நமக்கு ரொம்ப வேணுங்கப்பட்டவர் (வேண்டியவர் என்கப்பட்டவர்)னு ஒரு ஃபீலிங். ஏதோ தர்சனத்துக்கு வந்தோம் – போனோம்னு இல்லாம, அவரோடவே இருந்துடறதுக்கு மனஸு ‘ரெடி’யாயிடுத்து. அப்படி ஒரு ப்ரியம்!

“என் ப்ரியம் என்னவோ? அவர் எங்கிட்ட காட்டின ப்ரியந்தான் ப்ரியம் – அத்தனாம் பெரியவர் விவரம் தெரியாத சின்னப் பையன்கிட்ட, ஒரு காரணமும் இல்லாம…..! பாக்கறது, பேசறது, சொல்றதைக் கேட்டுக்கறது, நடத்தறது எல்லாத்துலயும் அவரோட அந்த ப்ரியம் தெரிஞ்சுது. அதுலேயே எனக்கும் ப்ரியம் ஜாஸ்தியாச்சு.

“ஸ்பிரிச்சுவ’லா என்ன ஆச்சுங்கறதுதானே ஒன் (ரா.க.வின்) கேள்வி? திரும்பித் திரும்பிக் கேட்டுண்டிருக்கே. நான் பதில் சொல்லாம க்ராக்கி பண்ணிக்கிறேன்னு ஒனக்குத் தோணலாம். ஆனா, நடக்காத விஷயத்தைப் பத்தி என்ன சொல்றது? எனக்கு அப்ப ‘ஸ்பிரிட்’டே தெரியாது. அதைப் பத்தி நெனச்சதும் இல்லை. ஆனாலும், ஸ்பிரிச்சுவலா ஒண்ணு நடக்கறத்துக்கு – குரு க்ருபை அப்டி நடத்தி வெக்கறத்துக்கு – (அதற்கு பாத்திரமாகிறவர் அது குறித்துத்) தெரிஞ்சுக்கணும்னோ, நெனக்கணும்னோ இல்லைதான். அப்டி ஒண்ணு ஆனவிட்டுகூட (நடந்த பிற்பாடுகூட, பாத்திரத்திற்கு) அது தெரிய வேண்டியதில்லை, அந்த மாதிரி வேணா ஏதாவது ஆயிருக்குமோ என்னமோ?

“எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியலே. ‘பெரியவா சொல்லமாட்டேங்கறாளே”-ன்னு தாபப் படாதே! எனக்கே தெரியாதப்போ என்ன சொல்றது?”

பரம அன்புடன் அந்தப் பரம ஸத்ய ஸ்வரூபர் இவ்வளவு இளகிக் கனிந்து சொன்ன பிற்பாடும் அவரை அந்தரங்க ஆன்மிய அநுபவங்களை வெளியிடாது ஒளித்தாரென்று நினைப்பது தவறாக, அபசாரமாகவே தோன்றலாம். என்றாலுங்கூட, பிற்காலங்களில் – நெடிதே வளர்ந்த பல்லாண்டுகளிலும் – அவர் தமது திவ்ய சக்தியால் விளைவித்த அற்புதங்களே என நமக்கு நன்கு தெரியும் எண்ணி முடியா விஷயங்களிலும் அச் சக்தியை அடியோடு மறைத்தே வந்ததை நாமும் மறைப்பதற்கில்லை. அதனால்தான், அவர் ஸத்ய ஸ்வரூபர்தாம், பரம அன்பில் இளகிக் கரைபவர்தாம் என்றாலும், ’தேவ ரஹஸ்யம்’ என்று சொல்லும் ஒன்றாகவே அவரது உள்வாழ்வு விவரங்கள் இருக்க வேண்டும் என்பது பராசக்தியின் ஸங்கற்பமாயிருக்கலாம்; எனவே அவர் வெளியிட்ட வெளி விவரங்களோடு அவரது வாழ்க்கைச் சம்பவங்களும் அநுபவங்களும் முடிந்து விடவில்லை என்று கருத வேண்டியிருக்கிறது.

இன்னும் வரும்……….

____________________________________________________________________________

Maha Periyava As Shri Ra. Ganapathy Anna Saw Him

(In his own words)

STEP 3

Whatever it be, the then Kamakoti Peetathipathi did not inform Swaminathan about His decision. It is quite natural that any great person would not have revealed such an important matter to so young a boy like Swaminathan. That too, to a student of a Christian missionary school, who did not have the eligibilities which are necessary to ascend the throne of a JagathAchArya Peetam. Even though his ancestral family had a very close following of Sree Matam from very early days, as far as he was concerned, he did not have that familiarity or acquaintance. There is no surprise, then, in not telling him that the administration of the great organization was to be handed over to him. Later also, the then Peetathipathi was unable to convey this to him, as HE attained Sidhdhi after seven months.

That much from the erstwhile Acharyar. From the side of Swaminathan, as I have already mentioned, though he lived 88 years after that, He did not seem to have revealed to anybody, those inner experiences which He would have got from those meetings. He has insisted upon this writer that He did not experience any such thing. But still, after this writer pleaded with Him persistently, He did reveal His external feelings somewhat elaborately and just hinted at some of the inner feelings. Here they are presented for the benefit of the readers.

“When I saw Him, it was not like seeing other people. I had a feeling that He was someone great, and a sense of respect and regard, which I have not got towards anybody else till that time, engulfed me. I have heard of great souls and wise men who were regarded as one with ‘Swami’ (GOD) only in stories and PurAnAs; I have witnessed in dramas. I had a feeling that now only ‘I am seeing someone like that in front of me’. A feeling of respect rose in me, which I did not get from hearing stories and seeing dramas.”

“The feeling of respect apart, I had also developed a certain feeling of ‘affection’. He was such a great person, while I was a small boy; even then, I felt that ‘this great Mahan(soul) is someone dear to me’. It did not pass off as ’Ok, I came for Darsan and left’, but instead, my mind was ready to stay with Him forever. That was the kind of affection I developed.”

“I do not know whether my affection was ‘real affection’, but the affection He showed towards me was real. I saw that affection in Him when He, being such a great soul, and for no reason at all, met me, talked to me, heard me, who was such a small boy. My affection towards Him increased because of that only.”

“Your (Ra.Ganapathy’s) question is ‘what happened spiritually?’ is it not? You are asking me again and again; You may think that I am making a fuss without giving you an answer. But what can I say about something which did not happen? I do not know ‘spirit’ at that time! I never even thought about it. But, for something spiritual to happen—for a blessing that makes it happen—-there is no need for the concerned person either to know it or think about it. Even after such a thing happens to a person, it is not necessary for the concerned person to be aware of it. Something like that might have happened.”

“I am unable to tell you anything; do not get upset that ‘Periava is not saying anything’. What can I tell you when I myself do not know!”

When the epitome of supreme truth said so much with such tender love, if I think that HE hid experiences of His inner mind and did not reveal them, I would be committing a gross disrespect to Him. In later times also—-the many long years—-in those many amazing incidents which He created with His Divine power, He had been concealing that power totally. That is why He is the epitome of Supreme truth; one who melts in supreme love—-but still, it might have been ‘ParAsakthi’s resolve that His experiences of inner soul must remain as ‘DEva Rhasyam’ (Divine secret). Therefore, we should think that His experiences and other incidents did not end with those matters of His external life.

TO BE CONTINUED………

இதை பகிர:

எங்களை தொடர்பு கொள்ளவும்