Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 2

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The second chapter where Anna talks about the divinity of Sri Periayava when he was a child.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the article, translation and a beautiful drawing…Rama Rama

ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா

(அவர் எழுத்திலேயே)

இரண்டாம் படி

இக் கட்டுரையாசிரியரிடம் ஸ்ரீசரணாள் தமது சரிதம் குறித்து ஏராளமான விவரங்கள் தெரிவித்தருளியிருக்கிறார். “வண்டி வண்டியா சொல்லியிருக்கேன்; ஒங்கிட்ட சொன்ன அளவுக்கு யார்கிட்டயும் சொன்னதில்லே” என்றெல்லாங்கூட அவரே கூறியதுமுண்டு. ஆயினும் இத்தனை சொல்லியும், நிறைவு ஏற்படுத்தாமல் குறைப்படுமாறேதான் வைத்திருந்தார்! ஏனெனில், அவர் கூறிய அத்தனை ‘வண்டி’யும் அவரது புறவாழ்க்கை எனத்தக்க வெளி விஷயங்களாகத்தான் இருந்ததேயன்றி, அதைவிட அனந்தம் மடங்கு பொருள் பொதிந்ததான அக வாழ்க்கை குறித்ததாக இல்லை. அவரது ஆன்மிக வாழ்வில் மிகவும் உயரியதான, மிகவும் அதிசயமான விவரங்களை நாம் எதிர்பார்க்கக்கூடிய கட்டங்களைப் பற்றி அவர் பெரும்பாலும் மௌனமே சாதித்தார். அல்லது உயர்வாக, அதிசயமாக எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, லேசாகத் தள்ளிக் கொண்டு போய்விட்டார்.

அவரது உன்னத தெய்விகத்தை உணர்ந்த எவராலும் இதை ஏற்க இயலாதுதான்.

பின் ஏன் சத்தியத் திருவுருவான அவர் அவ்வாறு மூடி மறைத்தார்? கலியின் பாதிப்பு முற்றி மானுடமான பாவனங்களுங்கூட மங்கிவரும் இன்றைய உலகின் கண்களுக்கு அந்த தெய்விக பாவனங்களை அவிழ்த்துக் காட்டலாகாது என்பதாலா? அல்லது, அனைவரும் தங்களுக்கு உண்மையில் இல்லாத உயர்வுகளைக் கல்பித்து வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய உலகுக்கு முற்றிலும் எதிர்வெட்டாக இருந்து, தனது உண்மை உயர்வை ஒளித்து, எளிமையே காட்டிச் சமன் செய்ய வேண்டும் என்பதால் அவ்வாறு உலக நாயகி திட்டம் செய்ததாலா? இந்த உள் வாழ்க்கை விவரங்கள் ரஹஸ்யமாக இருந்து, வெளி வாழ்க்கை விவரங்கள் மட்டுமே பிரகாசமானலுங்கூட அதுவே மஹா பெரியவாளின் சரிதத்தை மஹா மஹா இதிஹாஸமாகக் காட்டுவதால் அதற்கு மேல் பேராசைப் பட இன்றைய உலகுக்கு உரிமையோ தகுதியோ இல்லை என்று அவள் தீர்ப்புச் செய்ததாலா?

எப்படியாயினும், அச் சரிதத்தில் சுவை செறிந்த உள் விவரங்களை நாம் எதிர்பார்க்கும் இடங்களில் ஏமாற்றமே அடைகிறோம்.

பால ஸ்வாமிநாதனுக்கும் அன்றைய பீடாதிபதிக்கும் ஏற்பட்ட தொடர்பும் அவற்றிலொன்றாகவே உள்ளது. அது அத்யந்தத் தொடர்பு என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறதே தவிர அந்த அத்யந்தத்தின் ஆன்மிய அழகு நுணுக்கம் தெரியவரவில்லை.

ஒன்று மட்டும் அதிருஷ்டவசமாகத் தெரிய வந்திருக்கிறது – அக் காலத்து மடத்து முக்யஸ்தர்களில் சிலரும், பண்டிதோத்தமர் சிலரும் பிற்காலத்தில் கூறியதிலிருந்து. அதாவது, அன்றைய பீடாதிபர் ஸ்வாமிநாதனைக் கண்ட மாத்திரத்தில் அவனிடம் ஓர் உயர்வை உணர்ந்திருக்கிறார். பின்னர் அவனிடம் உரையாடியதில் அவனது உள்ளீட்டை நன்கு உறுதி செய்து கொண்டு அவனையே பீடத்தின் அடுத்த வாரிசாக நியமனம் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்திருக்கிறார். இத் தீர்மானத்தை அவர் அம் மடத்து முக்யஸ்தர்களிடமும் பண்டிதோத்தமர்களிடமும் வெளிப்படையாகவே கூறியுமிருக்கிறார். பால ஸ்வாமிநாதன் ஒரு மஹா புருஷனாக விளங்குவான் என்ற அளவுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறார். நேர்ப்பட இவ்வாறு அப் பூர்வாசாரியரின் தீர்மானத்தை அவரே கூறித் தாங்கள் அறிந்ததாக ஸ்ரீமடத்து முக்ய நிர்வாகியான மணக்கால் ஸ்ரீ கந்தஸ்வாமி ஐயர், மஹா வித்வான் திருவிசைநல்லூர் பிரம்மஸ்ரீ வேங்கடஸுப்பா சாஸ்திரிகள் போன்றோர் சான்று பகர்ந்துள்ளனர்.

அத் தீர்மானம் பூர்வாசாரியாருடையதேதானா? அல்லது தெய்வ சங்கற்பத்தையே அவர் அறிந்து அதன்மீது அப்படி தீர்மானித்தாரா? பின்னர் கூறியபடிதான் இருக்கவேண்டும்.

அப்போது சிருங்கேரி ஸ்ரீ மடத்தின் சீர்சால் அதிபர்களாக இருந்த ஸ்ரீசிவாபிநவ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளே கண்டு கொண்ட நமது ஸ்ரீசரணரின் பெருமையை, அவரை அப்படி ஸ்ரீசரணராக்கிய காஞ்சி ஸ்ரீ மடத்தின் அதிபர் கண்டு கொள்ளாதிருப்பாரா? கண்டு கொண்டால்தானே பாலன் ஸ்வாமிநாதனை ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீசரணராக அவர் ஆக்கியிருக்கிறார்? அதென்ன சிருங்கேரி ஸமாசாரம் என்று காதைத் தீட்டிக் கொண்டு கேட்கிறீர்களா? அது திருவருள் கூட்டி வைத்து இனி வெளிவரவேண்டிய நூல்களிலொன்றில் விரிவாகவே வரும்.

இன்னும் வரும்………………..

__________________________________________________________________________________

Maha Periyava As Shri Ra. Ganapathy Anna Saw Him

(In his own words)

STEP 2.

SreeSaranAl has revealed to this writer (Ra.Ganapathy) a lot of details about His life history.

“I have given you cartloads of information. I have not told others, as much as much I have told you.”—He used to say. But in spite of telling me so much, He had kept my hunger for more information, unfulfilled. This is because, the ‘cartloads of information’ that He had given me were all concerned about His external life only, and not about the internal life (spiritual life) which must have been more meaningful. He always kept silent on the superior and more amazing matters concerning His spiritual life. Or, He avoided them by saying that ‘nothing superior or amazing happened’.

No one who is aware of His superior Divinity, can accept this.

Why then, did He—the Epitome of Truth—hide those things? Is it because, in the present times, when the impact of ‘KALI’ is increasing day by day, and when the human concepts are fast deteriorating, those Divine concepts should not be revealed? Or, is it because the ‘Almighty Shakthi’ planned to balance out the present trend of many who boast of superior things which do not exist in them, by taking an exactly opposite position and hiding His truly superior traits, and showing austerity and simplicity? Or is it because She decided that the present world does not deserve , nor it has a right to be greedy, when these matters of His external life are themselves more than sufficient, with His spiritual life hidden from the world, to make His history a very great epic?

However, when we expect to know about the interesting matters of His spiritual life history, we meet only with great disappointment.

The communication between ‘child’ Swaminathan and the then PeetAthipathi is one such thing. While we know that it was a very very close relationship, we are not aware of the precise spiritual beauty of that close relationship.

But we know at least one fact, from some of those important persons and learned men of those days, who have revealed some aspects (of the meetings). That the moment the PeetAthipathi at that time, had sighted Swaminathan, He had realized some greatness in him. While speaking with him He had reconfirmed the nature of his inner self and decided to make him the next heir apparent of the Peetam. He had also told those important and learned persons of that day openly about his decision. He had very distinctively informed them that ‘child’ Swaminathan would become to shine as a great soul. People such as The chief administrator of the Sreematam Manakkal Sri Kandhaswamy Iyer, and great VidhvAn Thiruvisainaloor Brahmasree VenkatasubbA Sastrikal, have vouched for having been directly and personally told about this decision by the erstwhile Acharyar.

Was this decision solely that of the erstwhile Acharya? Or, was it that He understood the Divine ordination and acted upon it? It must have been the latter.

Sri SivAbinava Narasimha Bharathi Swamikal who was the then PeetAthipathi of Srungeri SriMatam had Himself realized the greatness of Sree SaranAl; Is it any surprise that the Peetathipathi of Kanchi Matam, who decided to make him the next heir apparent, would not have realized the same? Because He had realized the fact only, He had made ‘child’ Swaminathan, the Sankaracharya Sri Sarnar. You are eager to know about the ‘Srungeri matter’, aren’t you? Well, we will read about it elaborately in some later books that are to come!.

TO BE CONTINUED………..

இதை பகிர:

எங்களை தொடர்பு கொள்ளவும்